கந்தளாய் பகுதியில் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
திருகோணமலை-கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு பவுசர்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் இருவர் திருகோணமலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 87 ஆம் கட்டை சந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
திருகோணமலையிலிருந்து கொழும்புக்கு எரிபொருட்களை ஏற்றிச் சென்ற பவுசர் வாகனமொன்றும், குருணாகலையிலிருந்து திருகோணமலைக்குச் சென்ற பவுசர் வாகனமுமே இவ்வாறு மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் 35 மற்றும் 46 வயதுடைய சாரதி மற்றும் உதவியாளர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன்,விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.









இது இங்கிலாந்து போலவே இல்லை... பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர் வாழும் பிரித்தானிய நகரம் News Lankasri
