கந்தளாய் பொலிஸாரின் வாகன பரிசோதனை: விதிமீறுவோருக்கு கடும் நடவடிக்கை
திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி பிரதான வீதியில் வாகனப் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனைகள், கந்தளாய் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சன்ஜீவ பண்டார தலைமையில் நேற்று(09) இடம்பெற்றுள்ளன.
பிரேக்குகள், வாகனச் சக்கரங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் சோதிக்கப்பட்டதுடன், போக்குவரத்துக்கு தகுதியற்ற வாகனங்கள், நிறம் மாற்றப்பட்ட வாகனங்கள், கூடுதல் விளக்குகளுடன் இயங்கும் வாகனங்கள், சட்டவிரோத உதிரிபாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் மீதும் விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சட்ட நடவடிக்கை
மேலும் அதிக சத்தம் எழுப்பும் ஒலிப்பான்கள் மற்றும் சைலன்சர்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராகவும் நேற்று முதல் கடுமையான சட்ட நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் மூலம் விபத்துகளை குறைத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே நோக்கமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam