செம்மணி மனிதப் புதைகுழி - சர்வதேச நீதிகோரும் மக்களுக்கு கந்தையா பாஸ்கரன் ஆதரவு!
எங்களுடைய மக்களை கொன்று குவித்த தலைவர்களிடமே சென்று நியாயம் கேட்பது முட்டாள்தனமான செயல். அதனால் தான் எம்முடைய நீதியை சர்வதேசத்திடம் கேட்க முடிவு செய்துள்ளோம் என பிரபல தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
“செம்மணி மனித புதைகுழி தொடர்பான விசாரணைகளை சர்வதேசம் முன்னெடுக்க வேண்டும்” எனக் கோரி, யாழ்ப்பாணத்தில் இன்று(13.09.2026) இடம்பெறும் பேரணியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செம்மணி மனித புதைகுழி மீதான விசாரணை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எம்முடைய மக்களை இனவாதம் மற்றும் மதவாதம் என்ற பெயரில் முன்னாள் தலைவர்கள் கொன்று குவித்தார்கள். அதன் எச்சங்களை நாம் செம்மணி மனிதப் புதைகுழியில் காணக்கூடியதாக இருக்கின்றது. அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும். உறவுகளை இழந்தவர்களுக்கு அரசாங்கம் சரியான தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இனவாதம் மற்றும் மதவாதம் அற்றதொரு அரசாங்கத்தை உருவாக்குவோம்” என வாக்குறுதியளித்து ஆட்சியைப் பிடித்தவர்கள் தற்போது மௌனமாக இருக்கிறார்கள்.
அதேவேளை, ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுக்குக் காரணமானவர்கள் இரண்டு ஆண்டுகளின் பின்னர் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்கள்.
இந்த விடயம் அநுர அரசாங்கத்திற்கான வரவேற்பை அதிகரித்துள்ளது. அதேபோன்று, எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றால், தமிழர்களாகிய நாம் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO..