கடந்த அரசாங்கத்தால் கைவிடப்பட்ட பொது நூலகம்: கவலை வெளியிடும் மக்கள்
கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பேராறு பகுதியில் அமைந்துள்ள பொது நூலகம், தற்போது காடு வளர்ந்து கரையான் புத்துகள், சுவர்கள் வெடித்து கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவது பிரதேச மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
2008ஆம் ஆண்டு, மறைந்த முன்னாள் தவிசாளர் பாரூக்கின் முயற்சியினால் இந்த நூலகம் ஆரம்பிக்கப்பட்டது.
ஏலாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழும் இப்பகுதியில், நூலகம் கல்விக்கான ஓர் முக்கியமான ஆதாரமாக விளங்கியிருந்தது.
மூன்று வருடங்களாக கந்தளாய் பிரதேச சபையின் ஊடாக பத்திரிகை விநியோகம் மட்டும் வழங்கப்பட்டாலும், நிரந்தர ஊழியர் நியமிக்கப்படாத காரணத்தினால் நூலக செயற்பாடுகள் தொடர முடியவில்லை.
மூடப்பட்ட நிலை
இருப்பினும், பேராறு சனசமூக நிலையம் நூலகத்தை ஐந்து முதல் ஆறு வருடங்கள் வரை இயங்கச் செய்தது. ஆனால் நிதி தட்டுப்பாடு காரணமாக, கடந்த பதினைந்து ஆண்டுகளாக நூலகம் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது.
இந்நிலையில், "கந்தளாய் பிரதேசத்தில் தமிழ் மொழி பேசும் ஆருக்கும் மேற்பட்ட பாடசாலைகள் இருந்தும், மாணவர்களுக்கான ஒரு பொது நூலகம் கூட இல்லாதது மிகப்பெரிய குறையாக உள்ளது." என பேராறு மக்கள் தெரிவிக்கின்றனர்.
பேராறு நூலகத்தை மீண்டும் புதுப்பித்து, நிரந்தர ஊழியர் நியமித்து, கல்வி வளர்ச்சிக்காக மாணவர்களுக்கு திறந்துவைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 12 ஆம் நாள் திருவிழா



