காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட தகவல்
காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு இலங்கை பெற்றோலிய மொத்த களஞ்சியக்கூட்டுத்தாபனம் 224 மில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஏசாவிதானகே எம்.பி கேட்ட கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து பேசிய அவர்,
காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான இரண்டு எண்ணெய்க்குதங்களை பயன்படுத்தி வந்த இலங்கை பெற்றோலிய மொத்த களஞ்சியக் கூட்டுத்தாபனம் அதற்கான சேவை கட்டணமான 2025.07.31 வரையான காலப்பகுதியில் 224 மில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளது.
காணி தொடர்பான பிரச்சினை
குதங்கள் அமைக்கப்பட்டுள்ள காணி தொடர்பில் காணப்பட்ட பிரச்சினையால் கட்டணம் செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
2016 ஆம் ஆண்டு முதல் செலுத்ததாக காரணத்தால் அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய, குறித்த எண்ணெய் குதங்கள் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்தால் அமைக்கப்படுள்ளது.
அதனோடு இணைந்த ஆறு ஏக்கர் காணியை பயன்படுத்துவதால் அதற்கான சேவை கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை அறவிட நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
