வர்த்தக துறைமுகமாக தரமுயர்த்தப்படும் காங்கேசன்துறை துறைமுகம்!
பிராந்திய கடல் வலயத்தில், இலங்கையை ஒரு பிரதான மையமாக மாற்றுவதையும், இந்தியா மற்றும் இலங்கைக்குமிடையேயுள்ள சுற்றுலாவை மேம்படுத்துவதையும் மையமாகக்கொண்டு, இலங்கையில் உள்ள மிக முக்கியமான துறைமுகமான காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக மேம்படுத்த வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்த இராஜாங்க அமைச்சு விடுத்துள்ள செய்தி குறிப்பிலே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது,
“இந்தியா மற்றும் இலங்கை இடையே இந்த திட்டம் EXIM வங்கியின் 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியின் கீழ் செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடன் வரி ஒப்பந்தம்
மேலும் இந்த திட்டத்தினை செயல்படுத்தும் முகவர் இலங்கை துறைமுக அதிகாரசபை ஆகும்.
இந்நிலையில் இலங்கை துறைமுக அதிகார சபைக்கும், திறைசேரிக்கும் இடையில் கடனுதவி ஒப்பந்தம் 2018 அக்டோபர் மாதம் கைச்சாத்திடப்பட்டதுடன் டொலர் கடன் வரி ஒப்பந்தம் 2018 ஜனவரி 10ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து நேரடியாக பொருட்களை கொண்டுவர போக்குவரத்து நடவடிக்கைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சுற்றுலாவை மேம்படுத்துவது இதன் மற்றுமொரு நோக்கமாகும்.
மேலும் இது உள்நாட்டு துறைமுகங்களுக்கிடையில் பொருட்கள் போக்குவரத்து நடவடிக்கைகளை திறம்பட செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு தரப்பினருக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள திட்ட முகாமைத்துவ ஆலோசனை ஒப்பந்தத்தின் படி, இத்திட்டத்திற்கான மொத்த திட்ட காலம் 39மாதங்கள் ஆகும்.
அவற்றில், திட்டமிடல் காலம் ஒன்பது மாதங்கள், கட்டுமான காலம் 18 மாதங்கள், மற்றும் குறைபாடு உத்தரவாத காலம் 12 மாதங்கள் ஆகும்.
துறைமுக அதிகார சபைக்கு வழங்கப்பட்ட முன்மொழிவு
இதற்கமைய காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அண்மித்த 50 ஏக்கர் காணியை சுவீகரிக்க இலங்கை துறைமுக அதிகார சபைக்கு (SLPA) முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
எனவே 15 ஏக்கர் பொது காணி மற்றும் 35 ஏக்கர் தனியார் காணயை சுவீகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தனியாருக்குச் சொந்தமான நிலம், நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் விதிகளின்படி குறிப்பிட்ட இழப்பீடு செலுத்தி கையகப்படுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.”





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
