கணேமுல்ல சஞ்சீவ படுகொலை வழக்கு! பெண் சட்டத்தரணிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
பாதாள உலகக் குழுத்தலைவர் கணேமுல்ல சஞ்சீவ (சஞ்சீவ குமார சமரத்ன) படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் 28 ஆவது சந்தேகநபர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை மனு மீதான உத்தரவு எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2025 பெப்ரவரி 19 அன்று கணேமுல்ல சஞ்சீவ வழக்கு விசாரணைக்காக கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட நிலையில், நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
28 ஆவது சந்தேகநபர் கைது
இக்கொலை தொடர்பாக துப்பாக்கிதாரி எனக் கருதப்படும் நபர் உட்படப் பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், துப்பாக்கிதாரிக்கு உதவிய குற்றச்சாட்டில் 28 ஆவது சந்தேகநபராக சட்டத்தரணி தமாரா குமாரி அபயரத்ன கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சட்டத்தரணி தமாரா குமாரி அபயரத்ன சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை மனு மீதான உத்தரவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் கைது செய்யப்பட்டு ஒரு வருட காலம் கடந்துள்ள நிலையில், வழக்கின் சாட்சியாளர்களிடமிருந்து வெளிப்படுத்தப்பட்டவை என கூறப்படும் சாட்சியங்கள் அன்றி வேறு எந்தச் சாட்சியங்களும் இல்லாமையால் , அவரைப் பிணையில் விடுவிப்பதற்கு சட்டரீதியான தடையெதுவும் இல்லை என ஜனாதிபதி சட்டத்தரணி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி மன்றில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதிபதி சந்தேகநபர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை மனு மீதான உத்தரவு எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி அறிவிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளார்.