கண்டி தலதா பெரஹராவில் அநுர கண்ட எதிர்காலம்!
கண்டி தலதா பெரஹராவில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டதை பார்த்த போது, நமது நாட்டிற்கு ஒரு எதிர்காலம் இருக்கிறது என்பதை உணர்ந்ததாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து நேற்றையதினம்(09) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“கண்டி தலதா பெரஹராவில் சிறு குழந்தைகளும் பெரியவர்களும் மிகவும் வீரியத்துடன் நடமாடுவதைக் கண்டேன்.

அரச அதிகாரி ஒருவருக்கு அனுப்பப்பட்ட சர்ச்சைக்குரிய கடிதம்.. விடுதலைப் புலிகளை வைத்து பழிவாங்கும் செயல்
புதிய தேசம்
இவ்வாறு கலாசார நிகழ்களுடன் இணைக்கப்பட்ட ஒரு தேசமாகவே நாம் பயணிக்க விரும்புகின்றோம்.
வழிப்பாட்டுத் தளங்களில் உள்ள அரசியலை அகற்றி அவற்றை வரலாற்றுப் பாதுகாவலர்களின் பாரம்பரியமாக மாற்றுவதே ஒரு அரசியல் அதிகாரியாக வழங்கக்கூடிய மிக உயர்ந்த ஆதரவு.
இந்த தலதா பெரஹரா விழா ஒரு புதிய தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஒரு மைல்கல் ஆகும்.
நாட்டின் எதிர்காலத்திற்காக, இதுபோன்ற ஒரு கலாசார விழாவை பொதுமக்களிடம் ஒரு ஈர்ப்பாகக் கொண்டு செல்ல வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா




