கண்டியில் 8000 பேர் உயிர் ஆபத்தில்! வெளியான அதிர்ச்சி தகவல்
கண்டி தேசிய வைத்தியசாலையில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு இதய வடிகுழாய் இயந்திரங்களில் ஒன்று கடந்த 06 ஆம் திகதி முதல் முழுமையாக பழுதடைந்துள்ளது.
இதன் காரணமாக இருதய நோயைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக காத்திருப்போர் பட்டியலில், காத்திருக்கும் சுமார் 8,000 நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதய வடிகுழாய் இயந்திரங்கள்
இருதயத்தில் காணப்படும் பிரச்சினைகளை கண்டறிந்து, அதற்கான சிகிச்சைகளை வழங்கும் செயற்பாட்டை இந்த இயந்திரம் செய்கின்றது.
அதற்காகப் பயன்படுத்தப்படும் 14 இதய வடிகுழாய் இயந்திரங்கள் நாடளாவிய ரீதியில் உள்ள 11 வைத்தியசாலைகளில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.அவற்றில் 2 கண்டி தேசிய வைத்தியசாலையில் உள்ளன.
எனினும் 2006 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இயந்திரம் கடந்த 06 ஆம் திகதி முதல் முழுமையாக பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
You may like this video




