கண்டி - கொழும்பு பிரதான வீதி மூடப்படமாட்டாது: விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
கொழும்பு - கண்டி பிரதான வீதி, பஹல கடுகன்னாவ பகுதியில் இன்று(28) மூடப்படமாட்டாதென தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
ஆபத்தான நிலையிலுள்ள கற்பாறைகளை அகற்றுவது தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படாமையே இதற்கான காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கற்பாறைகளை அகற்றும் நடவடிக்கையை வீதியை மூடாமல் மேற்கொள்வது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.
புலனாய்வு தகவல் கிடைத்தும் தடுக்கப்படாத உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
ஆபத்தான நிலைமை
இந்த விடயம் தொடர்பில் ஏனைய தரப்பினருடன் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஆபத்தான நிலைமையிலுள்ள கற்பாறைகளை அகற்றுவதற்காக வீதியை மூடவேண்டிய நிலை ஏற்படுமாக இருந்தால் அது தொடர்பில் முற்கூட்டியே அறிவிக்கப்படுமென தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |