கோர விபத்தில் சிக்கி உயர்தர மாணவன் பலி! உடனடியாக இடைநிறுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டி
புதிய இணைப்பு
கண்டி - பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்த பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை (02) புனித சில்வெஸ்டர் கல்லூரியின் இரண்டு உயர் தர மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் பேருந்துடன் மோதியதில், மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதன்போது மற்றொரு மாணவர் படுகாயமடைந்து கண்டி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில் புனித சில்வெஸ்டர் கல்லூரியின் கணித பிரிவை சேர்ந்த உயர்தர மாணவன் நெதுலா நிமிடினு என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தை தொடர்ந்து, பல்லேகலே சர்வதேச மைதானத்தில் கண்டி சில்வெஸ்டர் கல்லூரிக்கும் வித்யார்த்தா கல்லூரிக்கும் இடையே நடைபெற்று வந்த 66 ஆவது கிரிக்கெட் போட்டியை உடனடியாக இடைநிறுத்த கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
முதலாம் இணைப்பு
கண்டியில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்குள்ளானதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கண்டி - பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்த கிரிக்கெட் போட்டி ஏற்பாட்டிற்காக இன்று காலை (02) சென்ற போதே விபத்து சம்பவித்துள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்த விபத்தில் மற்றொரு மாணவர் படுகாயமடைந்து கண்டி தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கண்டியில் உள்ள பிரபல பாடசாலையில் கல்வி பயிலும் 12 ஆம் வகுப்பு உயர்தர மாணவரே உயிரிழந்துள்ளார்.
கண்டி-திகன வீதியில் உள்ள பல்லேகலே இராணுவ முகாமுக்கு முன்பாக, திகனவிலிருந்து வந்த பேருந்துடன் மாணவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில், பேருந்தின் அடியில் இருவரும் சிக்கி காயமடைந்ததாக கூறப்படுகின்றது.
இச்சம்பவம் குறித்து பல்லேகலே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஷமீந்திர ராஜபக்ச மற்றும் கபில சந்திரசேனவின் மனைவிக்கு பிடியாணை! விமான நிலைய அதிகாரிகளுக்கு சென்ற உத்தரவு
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam