அபாயா அணிந்து ஆண்கள் நுழையும் சாத்தியம்: எடுக்கப்பட்ட நடவடிக்கை
கண்டி - அக்குரணை 6ஆம் கட்டை பகுதியில் பள்ளிவாசல் ஒன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற உளவுத் தகவலை அடுத்து, கண்டி பொலிஸ் வலயத்தில் உள்ள 203 பள்ளிவாசல்களுக்கும் தொடர்ச்சியாக பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை முஸ்லிம் பெண்களை பரிசோதிக்க முடியாது என்ற நிலையில், அபாயா போன்ற ஆடைகளை அணிந்து ஆண்கள் உள்ளே வருவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
எனவே அபாயா போன்ற ஆடைகளை அணிந்து வரும் பெண்கள் அடையாள அட்டையைக் கொண்டு வருகட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் தமது கட்டளைகளை மீறி பயணிக்கும் வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கான அனுமதியுள்ளதாகவும் பொலிஸார் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளனர்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் Cineulagam
