விசமிகளால் நாசமாகும் பெயர்ப்பலகை : கவனமெடுக்காத கமநல சேவைகள் நிலையம்
ஒரு ஊருக்கு பெயர்ப் பலகை என்பது எத்தனை அவசியமானது என்பதை நாம் அறிவோம். அதேபோல பல அரச நிறுவனங்கள், அலுவலகங்கள், சேவை பெறும் ஏனைய அலுவலகங்கள் என்பனவும் எவ்வளவு முக்கியமானது என்பது அதனூடாக பயன் பெறுபவர்களுக்கு தெரியும்.
எனினும், பல்வேறு பகுதிகளில் ஊர்களுக்கான பெயர்ப் பலகைகள் சேதமடைந்தும், பெயர்கள் அழிக்கப்பட்டும் நாசம் படுத்தப்படுகின்ற செயற்பாடுகளை அவதானிக்க முடிவதாய் இருக்கின்றது. பெயர்ப் பலகைகள் மாத்திரம் அல்ல அரச அலுவலகங்களுடைய அறிவிப்பு பலகைகள் உள்ளிட்டவையும் சேதமாக்கப்படுகின்றன.
சாதாரணமாக அறிவிப்பு பலகையில் இருந்து தகவல்களைப் பெற்று தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்வோரும் உண்டு.
இந்த நிலையில் கிளிநொச்சியில் உள்ள கண்டாவளை கமநலசேவை நிலையத்தின் பெயர்ப்பலகை சேதமாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதுவா முன்னுதாரணம்
ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் "கமநல சேவை நிலையம். கண்டாவளை " என குறிப்பிட்ட பலகையின் பகுதி கிழிக்கப்பட்டு வாசிக்க முடியாதபடி சேதமாக்கப்பட்டுள்ளது. தமிழில் எழுதப்பட்ட பகுதி சேதமாக்கப்படவில்லை.
கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலகம் உள்ளது. நீண்ட நாட்களாகியும் சேதமாக்கப்பட்ட பெயர்பலகையினை அகற்றி புதிய பெயர்பலகையினை பொருத்துவதற்கு கமநல சேவை நிலையம் கண்டாவளை நடவடிக்கை எடுக்கவில்லை.
அறிவிப்பு பெயர் பலகைகள் சேதமாக்கப்படுவது நல்ல முன்னுதாரணமாக அமையாது என்பதோடு, பொறுப்புடைய ஒரு சமூகத்தின் செயற்பாடாகவும் இது அமையாது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |