வரிசைகளுடன் நின்ற நாட்டை நாங்கள் மாற்றி அமைத்துக் கொண்டிருக்கின்றோம்! பிரபு எம்.பி சுட்டிக்காட்டு
நமது நாடு இருக்கும் இன்றைய காலகட்டத்தில் தேசிய மக்கள் கட்சி அரசாங்கம் ஆட்சி அமைத்த பின்னர் நாட்டில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் தட்டுப்பாடு, டீசல் தட்டுப்பாடு, அனைத்து தட்டுப்பாடுகளுடன் வரிசைகளுடன் நின்ற நாட்டை நாங்கள் மாற்றி அமைத்துக் கொண்டிருக்கின்றோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
போக்குவரத்து சபை
“இலங்கையை போக்குவரத்து சபைக்குரிய ஆளணிப்பற்றாக்குறை மற்றும் ஏனைய இதர குறைபாடுகளை எதிர்காலத்தில் எமது அரசாங்கத்தின் மூலம் நிவர்த்தி செய்து தரப்படும்.
பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்களிலும் மாவட்ட அமைத்து குழு கூட்டத்திலும் போக்குவரத்து விடயங்கள் தொடர்பில் தொடர்பில் அதிகம் பேசப்படுகின்றன குறிப்பாக பட்டிருப்பு தொகுதியில் அமைந்திருக்கின்ற கருவாஞ்சிகுடி பிரதேசம் போரதீவுப்பற்றுப் பிரதேசம் பட்டிப்பளைப் பிரதேசம், போன்றவற்றின் மக்கள் எதிர்கொள்ளும் போக்குவரத்து பிரச்சினைகள் தொடர்பில் அதிகம் பேசப்படுகின்றன.
போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகள் தட்டுப்பாடு அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் தட்டுப்பாடு, குறிப்பாக போக்குவரத்தில் ஈடுபடுகின்ற வீதிகளில் காணப்படுகின்ற புனரமைப்பு வேலைகள் போன்ற பல விடயங்கள் தொடர்பில் நாங்கள் கலந்துரையாடி வருகின்றோம்.
உடனடியாக எதனையும் செய்துதர முடியாது. அதனை கட்டம் கட்டமாக நாங்கள் நிவர்த்தி செய்வதற்கு முயற்சி செய்து வருகின்றோம்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
