கந்தக்காடு புனர்வாழ்வு முகாமிலிருந்து 50க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்
வெலிகந்த, கந்தக்காடு புனர்வாழ்வு முகாமிலிருந்து சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு காணாமல்போன கைதிகளை தேடி விசேட தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த முகாமில் தங்கியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் இன்று மாலை, முகாமின் வேலிகளை உடைத்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.
இவ்வாறு தப்பிச்சென்றவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வனப்பகுதிக்குள் கைதிகள் தப்பியோட்டம்
கந்தக்காடு வனப்பகுதிக்குள் கைதிகள் தப்பிச்சென்றுள்ளதாகவும் அவர்களை இரவில் தேடுவது சிரமம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முகாமில் ஏற்பட்ட பதற்ற நிலையை பயன்படுத்தி கைதிகள் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதிகள் தப்பிச்செல்வதினை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, தப்பியோடிய சில கைதிகளை கைது செய்துள்ளதாக பொலிஸார் தற்பொழுது தகவல் வெளியிட்டுள்ளனர்.
புலம்பெயர் நாடுகளில் குறிவைக்கப்படுகின்ற தளபதிகளின் மனைவிகள்! ஒப்பரேஷன் துவாரகாவின் அதிர்ச்சித் தகவல்கள் (video)
கெத்தாக வீட்டிற்குள் வந்த ஜனனி, குணசேகரன் சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri