ஒவ்வொரு நாளும் காலையில் 235 வீடுகளுக்கு பேப்பர் போடுவேன்! எனது வெற்றியின் இரகசியம்...? கந்தையா பாஸ்கரன் (VIDEO)
''வாழ்க்கையில் சம்பாதித்து முன்னேற வேண்டும் என்ற ஆர்வத்தில் 235 வீடுகளுக்கு காலையில் பேப்பர் போடுவேன்'' என ஐபிசி தமிழ், லங்காசிறி ஊடக வலையமைப்பின் நிறுவனர் பாஸ்கரன் கந்தையா தெரிவித்துள்ளார்.
தொழில்துறையில் முன்னேற வேண்டும் என்ற ஆர்வத்தில் சிறு வயதிலிருந்தே தம்மை முழுமையாக ஈடுபடுத்தியமையே தற்போது தனது வெற்றிக்கான காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் பிரமுகர்களின் அறியப்படாத பக்கங்களைத் தேடும் நக்கீரன் சபை விசேட நிகழ்ச்சியில் அதிதியாகக் கலந்துகொண்டு தனது வாழ்வில் கடந்து வந்த பாதைகளையும்,எதிர்நோக்கிய சிக்கல்களையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.
தனது வாழ்க்கையில் பாதையிலே வந்த குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் எவ்வாறு தவிடு பொடியாக்கி எவ்வாறு இவ்வாறானதொரு நிலைமைக்கு வந்தார் என்பது தொடர்பில் வெகு எளிமையாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான காணொளியின் முழு வடிவம் உங்கள் பார்வைக்காக,