"தமிழினத்திற்கு கிடைத்த பொக்கிஷம்” கிழக்கு மாகாண ஆளுநரை புகழ்ந்த புலம்பெயர் தொழிலதிபர்(Video)
கிழக்கு மாகாண ஆளுநர் தமிழ் மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம் என தொழிலதிபரும் புலம்பெயர் தமிழருமான பாஸ்கரன் கந்தையா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் பேரில், 1987ஆம் ஆண்டு உச்சக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரால் கனகர் கிராம மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்ட போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான புனர்வாழ்வுத் திட்டத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று(11.07.2023) பார்வையிட்டுள்ளார்.
கனகர் கிராமத்தில் உள்ள 500 ஏக்கர் நிலப்பரப்பில் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான புனர்வாழ்வுத் திட்டத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனின் கோரிக்கையின் பேரில் உள்ளுராட்சி அதிகாரிகள் மற்றும் IBC குழுமத்தின் தலைவர் க.பாஸ்கரன் ஆகியோரின் ஆதரவுடன் இந்த நிலத்தை மீள்குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதற்கமையாக காணிகள் துப்பரவு பணிகள் இடம்பெறும் களத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர்
உட்பட தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையா சென்றுள்ளனர்.
இதன்போது உரையாற்றுகையிலே தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் பதவியேற்ற சில நாட்களிலே பெருமளவில் மாற்றங்களை செய்துள்ளார்.
இவர் தமிழினத்திற்கு கிடைத்த பொக்கிஷம் என்று தான் கூறவேண்டும். ஏனெனில் ஒரு இனத்தின் வலியை அந்த இனத்தை சேர்ந்தவரால் புரிந்துக்கொள்ள முடியும்.
குறிப்பாக கிழக்கு மாகாண மக்கள் ஆளுநரிடம் தமது தேவைகளை நேரடியாக சென்று தெரிவித்துக்கொள்ளலாம் என கூறியுள்ளார்.


























கார்த்திகை தீபம் சீரியல் நடிகை அர்த்திகாவின் புதிய தொடர்.. சன் டிவியில் விரைவில், ஹீரோ யார் தெரியுமா? Cineulagam

விஜய்யை நெருங்கிய நபரின் தலையில் துப்பாக்கியை வைத்த பாதுகாவலர் - விமான நிலையத்தில் பரபரப்பு News Lankasri
