இந்திய மாநிலங்களவை உறுப்பினரானார் கமல்ஹாசன்
இந்திய மாநிலங்களவை உறுப்பினராக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் இன்று(25) பதவியேற்றுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த திமுக வழக்கறிஞர் வில்சன், தொமுச தலைவர் சண்முகம் எம்.எம்.அப்துல்லா மற்றும் திமுக கூட்டணி சார்பில் தெரிவான மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் பதவிக் காலமும் அதிமுக ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அதிமுகவின் சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவிக் காலம் நேற்றுடன் (ஜூலை 24) நிறைவடைந்தது.
புதிய உறுப்பினர்களாக 6 பேர்
அவர்களுக்குப் பதில் புதிய உறுப்பினர்களாக 6 பேர் ஏற்கனவே போட்டியின்றி தெரிவாகினர்.
@lankasrinews எம்.பி.யாக பதவியேற்றார் கமல்ஹாசன்! #KamalHaasan #RajyaSabhaMP #KamalInParliament #MakkalNeedhiMaiam #KamalTakesOath #TamilInParliament #DMKAlliance #IndianPolitics #RajyaSabha2025 #KamalHaasanMP #TamilVoiceInDelhi #MNMParty #KamalHaasanNews #TholThirumavalavan #TamilRepresentation #ParliamentOath #PoliticalDebut #SouthIndianPolitics #KamalHaasanJourney
♬ original sound - Lankasri News
அவர்களில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திமுகவைச் சேர்ந்த ராஜாத்தி(கவிஞர் சல்மா) எஸ்.ஆர். சிவலிங்கம் பி.வில்சன் ஆகிய 4 பேர் இன்று மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றனர்.
இந்நிலையில், மாநிலங்களவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கமல்ஹாசன் தமிழில் உறுதிமொழி வாசித்து பதவியேற்றுக் கொண்டார்.
Seeing Kamal Hasan in Rajya Sabha is so so good.
— Sniffing Around (@SpaceTechUs) July 25, 2025
Wishing him all the very best for this new inning! pic.twitter.com/5hmxuVQBNA
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




