சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பில் அவதானம் தேவை: கமால் குணரட்ன
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இரக்கமின்றி செயற்படுவதாகவும், இது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கை குறித்து பிரதேச செயலாளர்களை தெளிவூட்டும் செயற்திட்டம் ஒன்று கொழும்பில் நேற்று(14.08.2023) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே குறித்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏழ்மையை சுரண்டும் தொழில்
மேலும், சட்டவிரோத ஆட்கடத்தல்களின் போது பாதிக்கப்பட்டவர்களின் உயிர்களை பணயம் வைத்து இலாபமீட்ட சிலர் முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இரக்கமின்றி மக்களின் ஏழ்மையை சுரண்டும் ஒர் தொழிலாளக சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கை மாறி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் இடையில் சட்டவிரோத ஆட்கடத்தல்கள் தொடர்பிலான பூரண ஒருங்கிணைப்பு மிகவும் அவசியமானது என கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.





விக்ரம் ரோலக்ஸ் போல் கூலி படத்தில் சர்ப்ரைஸ் ஹீரோ கேமியோ.. மிரட்ட வரும் முன்னணி நடிகர்? யார் தெரியுமா Cineulagam

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri
