16 பாடசாலை மாணவிகளுக்கு ஆசிரியர் செய்த கொடூரம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
களுத்துறை பகுதியில் 16 மாணவிகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய தனியார் வகுப்பு ஆசிரியருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆசிரியரை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்திய போதே, எதிர்வரும் 7ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
16 மாணவிகளை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக தெரிவித்து கடந்த மே மாதம் 11ஆம் திகதி குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டிருந்தார். '
பெற்றோரின் முறைப்பாட்டுக்கு அமைய கைது செய்யப்பட்ட ஆசிரியர்
இன்று வரை அவர் விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது மீளவும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை வடக்கு - காலி வீதியில் தனியார் வகுப்புகளை நடத்தும் சந்தேகநபரான ஆசிரியர், சிறுமிகளை வன்புணர்வு செய்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது கணவரின் மடிக்கணினியை பரிசோதித்தபோது அதில் சிறுமிகள் வன்புணர்வு செய்யப்படும் காணொளிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டதாக சந்தேக நபரான ஆசிரியரின் மனைவி சம்பந்தப்பட்ட மாணவிகளில் சிலரின் பெற்றோருக்கு அறிவித்திருந்தார்.
இதனையடுத்து மாணவிகளின் பெற்றோர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய ஆசிரியர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam