இலங்கையை உலுக்கிய களுத்துறை மாணவியின் மரணம்! சந்தேகநபருக்கு பிணை - மூவருக்கு விளக்கமறியல்
களுத்துறையில் விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரின் சாரதிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
விளக்கமறியல் நீடிப்பு
குறித்த, சம்பவம் தொடர்பான பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட ஏனைய மூவரும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று (09) களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், உயிரிழந்த மாணவியின் 19 வயதுடைய நண்பர் மற்றும் அவரது காதலன் ஆகியோர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, 16 பாடசாலை மாணவிகளை பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட களுத்துறை பிரதேசத்தின் உதவி வகுப்பு ஆசிரியர் இன்று மீண்டும் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது, சந்தேகநபரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 3 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
