நண்பர்களுடன் நீராடச்சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த விபரீதம்
களுத்துறை மாவட்டம், பதுரலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அத்துவெல்தொட பிரதேசத்தில் ஆற்றில் நீராடச்சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் பதுரலிய பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
மத்தேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

மேற்படி நபர் தனது நண்பர்கள் சிலருடன் இணைந்து ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த போதே எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கியுள்ளார்.
இதனையடுத்து, அங்கிருந்தவர்களாலும் பிரதேச மக்களாலும் அவர் உடனடியாக மீட்கப்பட்டு, பதுரலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுரலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஐரோப்பாவுக்கு கடும் பின்னடைவு... மிகப்பெரிய திட்டமொன்றைக் கைவிட்ட ஜேர்மனியும் பிரான்சும் News Lankasri
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan