களு கங்கை நீர்மட்டம் உயர்வு: இரத்தினபுரி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை
நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக களு கங்கையின் நீர்மட்டம் உயர்ந்து, வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
களு கங்கையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பராமரிக்கப்பட்டு வரும் நீரியல் அளவீட்டு நிலையங்களில் பதிவாகியுள்ள நீர்மட்டத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்ததன் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்குள் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும்! களனி கங்கையை அண்மித்த மக்களுக்கு எச்சரிக்கை
இதன்படி, களு கங்கையைச் சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த சில மணிநேரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கவனத்திற்கு..
இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல, நிவித்திகலை, இரத்தினபுரி, குருவிட்ட, அயகம, எலபாத்த உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த வெள்ள அபாயம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இரத்தினபுரி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்களும், சாரதிகளும் மிகுந்த அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், நிலைமையை கருத்திற்கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.