ஒரே பொலிஸ் நிலையத்தில் 24 பொலிஸ் அதிகாரிகள் உடன் இடமாற்றம்.. விடுக்கப்பட்ட உத்தரவு
கல்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தவிர்ந்த ஏனைய அனைவரும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம் மாவட்டத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அதன் பிரகாரம் 24 பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
15 அதிகாரிகள்
அத்துடன், ஏனைய 15 அதிகாரிகள் நாளைய தினம் தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் புத்தளம் மாவட்டத்தின் ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேநேரம் புத்தளம் மாவட்டத்தின் ஏனைய பொலிஸ் நிலையங்களில் இருந்து 35 பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கல்பிட்டிய பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan
ஆபத்தில் சிக்கிய குணசேகரன், விசாலாட்சி பேச்சால் குழப்பத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam