அதிரடியாக களம் இறங்கினார் கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் சுகுணன்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி. சுகுனன் தலைமையிலான குழுவினர் பெரியநீலாவனை தொடக்கம் சாய்ந்தமருது வரையிலான பகுதியில் உள்ள பிரதான வீதிகளில் பயணம் செய்த வாகனங்களைப் பரிசோதனை செய்து உரிய அனுமதிப்பத்திரம் இன்றி பயணித்தவர்களுக்கு பி.சி ஆர் பரிசோதனை செய்ததுடன், குறித்த சிலருக்கு வழக்குப் பதிவும் செய்துள்ளனர்.
குறித்த குழுவினர் இந்த நடவடிக்கையை இன்று(16) காலை முதல் முன்னெடுத்துள்ளனர்.
கல்முனை பிராந்தியத்தில் கோவிட் தொற்று தீவிரமடைவதைத் தொடர்ந்து அதனை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அதிரடி நடவடிக்கைகள் இனி தொடர்ச்சியாக கல்முனை பிராந்தியம் முழுவதுமாக நடைபெறவுள்ளது.
இத் திடீர் கண்காணிப்பு நடவடிக்கையில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி
வைத்தியர் ஏ.ஆர்.எம் அஸ்மி உட்பட பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள்,
இராணுவத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.




