கல்முனையில் பாரிய போராட்டம்! களத்தில் பதற்ற நிலை
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான அதிகாரத்தைப் பெற்றுத் தரக் கோரி கல்முனையில் வீதியை மறித்து தற்போது பாரிய போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குறித்த பகுதியில் பெருமளவான மக்கள் குழுமியிருப்பதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக களத்தில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
போக்குவரத்து பாதிப்பு
கல்முனையில் இருந்து அக்கரைப்பற்றிற்குச் செல்லும் பிரதான வீதியை மறித்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு நகரில் இருந்து கல்முனையை நோக்கி வரும் வழியில் கல்முனையை அண்டிய வைத்தியசாலை சந்தியும் மறிக்கப்பட்டுள்ளது. கல்முனை நகருக்குள் வரும் மூன்று வீதிகளை மறித்தும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்காரணமாக, குறித்த பகுதி மற்றும் வீதியுடனான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
கல்முனை பிரதேச செயலகத்திற்கான அதிகாரத்தைப் பெற்றுத் தரக்கோரி தொடர்ச்சியாக அப்பகுதி மக்களால் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், 90 நாட்களை கடந்து செல்லும் இந்த போராட்டமானது இன்று பாரிய போராட்டமாக உருவெடுத்துள்ளது.
இந்த போராட்டத்தில், பெருமளவான மக்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், செல்வராஜா கஜேந்திரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.











பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் News Lankasri

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan
