கல்முனை பிரதேச செயலக விவகாரம்: தொடர்ந்தும் நடைபெறும் போராட்டம்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிரான தொடர் போராட்டமானது, 14ஆவது நாளாக இன்றும் (07.04.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாக செயற்பட்டு வந்த மேற்குறித்த பிரதேச செயலகம் 1988களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டது.
தொடர்ந்து 1993ஆம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்ற தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருகின்றது.
நிர்வாக அடக்குமுறைகள்
எனினும், அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் இந்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாக போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இப்போராட்டத்தில், தமிழ் அரசியல் வாதிகளே ஏன் இந்த மௌனம்?, எங்களுடைய நிர்வாக உரிமைகளை நாம் பெறுவதில் உங்களுக்கென்ன பாதிப்பு? மற்றும் அரசியல்வாதிகளின் சூழ்ச்சிகளுக்குள் அகப்பட வேண்டாம் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam