11 வருடங்களாக கடமையாற்றி வரும் உதவியாளரை இடமாற்றம் செய்யுமாறு கோரிக்கை
அம்பாறை மாவட்டம் கல்முனை காணிப்பதிவகத்தில் கடந்த 11 வருடங்களாக எவ்விதமான இடமாற்றமும் இன்றி தொடர்ச்சியாக பெண் முகாமைத்துவ உதவியாளர் ஒருவர் கடமையாற்றி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் குறித்த அதிகாரியை அங்கிருந்து இடமாற்றம் செய்யுமாறு ஜனாதிபதி செயலக பிரதானி சாகல ரத்நாயகவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அக்கோரிக்கை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இடமாற்ற சிக்கல்
கல்முனை காணிப் பதிவகத்தைப் பொறுத்த மட்டில் 11 வருட காலங்களாக பொது நிர்வாக உள்நாட்டமைச்சின் சுற்று நிருபத்திற்கு விரோதமாகவும், அரசாங்க தாபனக் கோவை சட்டத்திற்கு முரணாகவும் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதியுடன் 11 வருடங்களை பூர்த்தி செய்து முடிக்கவிருக்கும் மேற்குறித்த முகாமைத்துவ உதவியாளர் எவ்விதமான இடமாற்றமும் இல்லாது கல்முனை காணிப் பதிவகத்தில் தொடர்ச்சியாக கடமையாற்றுவது என்பது அரசாங்க சுற்று நிருபத்திற்கு விரோதமாகவும், அரசாங்க தாபனக் கோவை சட்டத்திற்கு முரணாகவும் உள்ளது.
ஆனால் பொது நிர்வாக உள்நாட்டமைச்சின் சுற்று நிருபத்தின் படியும் அரசாங்க தாபனக் கோவை சட்டத்தின் படியும் ஒரு காரியாலயத்தில் தொடர்ச்சியாக 5 வருடங்களை பூர்த்தி செய்த ஒரு அரச ஊழியர் குறித்த காரியாலத்தை விட்டு இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது பல்லாண்டு காலங்களாக நடைமுறையில் இருந்து வருகின்ற சட்டமாகும். இதேவேளை கடந்த ஆண்டில் 5 வருடங்களுக்கு மேல் கல்முனை காணிப் பதிவகத்தில் தொடர்ச்சியாக கடமையாற்றி வந்த பல தமிழ் முஸ்லிம் ஊழியர்கள் அம்பாறை காணிப் பதிவகத்திற்கு பதிவாளர் நாயகத்தினால் இடமாற்றம் செய்யபட்டுள்ளார்கள்.

விடுதலைப் புலிகளின் தலைவர் ஒரு நேர்மையான தலைவர்: சர்ச்சையை ஏற்படுத்திய காணொளிக்கு கமால் குணரத்ன பதிலடி
நடவடிக்கைகள் எடுக்குமாறு கோரிக்கை
இப்படியான நிலையில் இவைகளுக்கு முரணாகவும் சட்டத்தை மீறியும் ஒரு முகாமைத்துவ உதவியாளர் மட்டும் தொடர்ச்சியாக 11 வருடங்கள் கடமையாற்றுவது என்பது சட்ட விரோதமாகும்.
கல்முனை பகுதிகளை அண்டியுள்ள பல ஊழியர்கள் பரஸ்பர (றீ பிளஸ்மென்ட்) இடமாற்றம் மற்றும் வருடாந்த இடமாற்றம் பெற முடியாமலும் கல்முனை பகுதிகளில் இடமாற்ற வெற்றிடங்கள் இல்லாமலும் வெளிமாவட்டங்களிலும் தூர இடங்களிலும் தொடர்ச்சியாக கடமையாற்றி வருகின்றார்கள்.
5 வருடங்களை கடந்த ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டால் மட்டுமே ஏனைய ஊழியர்கள் வெளிமாவட்டங்களில் இருந்தும் தூர இடங்களில் இருந்தும் கல்முனைக்கு இடமாற்றம் பெற முடியும்.
ஆனால் ஒரு ஊழியருக்கு மட்டும் 11 வருடங்கள் கொண்ட சலுகை வழங்கினால் ஏனைய ஊழியர்களுக்கு செய்யும் அநீதியாகும்.
இப்படியான சலுகைகளை ஒருவருக்கு மட்டும் கொடுக்காமல் ஏனைய ஊழியர்களும் கல்முனை காணிப் பதிவகத்தில் கடமையாற்றக் கூடிய வாய்ப்பை செய்ய வேண்டும்.
ஆகவே 11 வருடங்களை எட்டும் குறித்த முகாமைத்துவ உதவியாளர் வெளி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்படவேண்டும்.
அதற்கான பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் அமைச்சின் 2003 ம் ஆண்டின் ஸ்தான மாறு மற்றும் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் அமைச்சின் 2004 ம் ஆண்டின் சுற்றுநிருபம் மற்றும் அரசாங்க தாபனக் கோவை சட்டத்தின் சாப்டர்-III இடமாற்றம் ஆகிய சட்டங்களை நடைமறைப்படுத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.
கடிதத்தின் பிரதிகள் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன ,அமைச்சின் செயலாளர்,பதிவாளர் நாயகம் சமந்த விஜேசிங்க , சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் (நிர்வாகம்) கே.திருவருள் பிரதிப் பதிவாளர் நாயகம் (மட்டக்களப்பு), சமன் குமார உதவி பதிவாளர் நாயகம் (திருகோணமலை),தலைவர் பொதுச் சேவை ஆணைக்குழு மற்றும் பொதுச் சேவை ஆணைக்குழுவின் 8 உறுப்பினர்களுக்கும் தனித் தனியாக ஈ மெயில் மூலமாகவும் தபால் சேவை மூலமகவும் அனுப்பபட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |