ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பினை பிரித்தாள அரசாங்கம் சதி
ரணில் - ராஜபக்ச அரசாங்கமானது அரசியல் கட்சிகளை பிரித்தாளுதல் போன்று ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பினையும் தந்திரம் மூலம் பிரிக்க முற்படுகின்றது என இலங்கை ஆசிரியர் சங்க கல்முனை கல்வி வலய இணைப்பாளர் ஏ.எம்.எம்.சாஹிர் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது அல் - கமரூன் வித்தியாலயத்தில் நேற்று (08.07.2024) மாலை இடம்பெற்ற விசேட செய்தியார் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அங்கு அவர் கருத்துரைக்கையில்,
"ரணில் - ராஜபக்ச அரசாங்கம், அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பினை அரசியல் கட்சிகளை பிரித்தாளுதல் போன்று பிரித்தாளும் தந்திரம் மூலம் பிரிக்க முற்படுகின்றது.
முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
வடக்கு - கிழக்கு ஆசிரியர்கள் சுகவீன விடுமுறை போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிப்பதன் ஊடாக சிங்கள பகுதி மக்களிற்கு ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தினை கொண்டு வர எதிர்பார்க்கின்றது.
எனவே, இந்த அரசாங்கத்திற்கு 26 மற்றும் 27ஆம் திகதிகளிலான போராட்டம் தொடர்பில் ஒன்றினை தெரிவிக்க விரும்புகின்றோம்.
வெற்றிபெற்ற எமது போராட்டத்தை கொச்சைப்படுத்துவதற்கே இவ்வாறான பிரித்தாளும் தந்திரத்தை எம்மத்தியில் திணிப்பதை நாம் அறிவோம்.
எனவே, இந்த ஆசிரியர்களது நியாயமான போராட்டத்திற்கு செவி சாய்த்து எதிர்காலத்தில் இப்போராட்டம் உக்கிரம் அடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
சம்பள மிகுதி
பணமில்லை என்று கூறிகொண்டு நிறைவேற்று தர அரச ஊழியர்களுக்கு அதிகளவில் நிதி ஒதுக்குவதற்கு பணம் இருந்தால் ஏன் ஆசிரியர்களின் சம்பள மிகுதியை வழங்குவதற்கு பணமில்லை என்று கூறுக்கொண்டிருக்கிறீர்கள்?
ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாட்டினை தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுத்து மாணவர்களின் கல்வியை உறுதி செய்யுமாறு கேட்டு கொள்கின்றேன்.
இந்த அரசாங்கத்திற்கு எமது பலத்தை காட்டுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இனியும் நாங்கள் ஏமாறுவதற்கு தயாரில்லை என்பதை அரசாங்கத்திற்கு எடுத்து கூற வேண்டும்" என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 14 மணி நேரம் முன்

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri
