கல்லுண்டாய் குப்பைமேடு தானாக எரிகிறது! புதிய கதை கூறும் மானிப்பாய் தவிசாளர்

Jaffna Sri Lankan Peoples
By Kajinthan Jun 30, 2025 06:21 AM GMT
Report

மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குள் காணப்படும் கல்லுண்டாய் குப்பை மேடானது தானாக எரிவதாக மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் ஜசீதன் தெரிவித்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கல்லுண்டாய் பகுதியில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவுகள் சேகரிக்கும் பகுதி காணப்படுகிறது.

பாடசாலை மாணவிகள் மூவருக்கு நேர்ந்த துயரம் - பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

பாடசாலை மாணவிகள் மூவருக்கு நேர்ந்த துயரம் - பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

குப்பை மேடுகள் 

அந்த கழிவு சேகரிக்கும் பகுதியில் உள்ள குப்பை மேடுகள் குறிப்பிட்ட சில நாட்களுக்கு ஒருதடவை தீப்பற்றி எரிவது வழமையான செயற்பாடாக மாறிவிட்டது.

கல்லுண்டாய் குப்பைமேடு தானாக எரிகிறது! புதிய கதை கூறும் மானிப்பாய் தவிசாளர் | Kallundai Dump Fire Spark Row Hill Burning Manipay

இவ்வாறு குப்பைமேடானது எரிவதனால் அங்கு காணப்படும் மருத்துவ, பிளாஸ்டிக் உட்பட பல கழிவுப் பொருட்கள் அந்த தீயில் எரிந்து அதன்மூலம் வெளிப்படும் புகை அண்மைய பகுதிகளில் உள்ள குடிமனைகளில் வசிக்கும் சிறியோர் முதல் பெரியோர் வரை, வீதியில் செல்கின்ற மக்கள் என பலருக்கும் பாதிப்பு ஏற்படுவதுடன், சுவாசம் தொடர்பான நோய்கள் ஏற்படவும் வழிவகுக்கிறது.

இந்நிலையில் நேற்றுமுன்தினமும் இவ்வாறு குப்பைமேடு தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. அந்த தீயானது நேற்றுவரை (29) எரிந்தவண்ணம் காணப்பட்டது.

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் : வெளியான மற்றுமொரு தகவல்

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் : வெளியான மற்றுமொரு தகவல்

போராட்டம்

இந்நிலையில் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் ஜசீதனுக்கு தொலைபேசி மூலம் இதனை தெரியப்படுத்திய நிலையில்,

கல்லுண்டாய் குப்பைமேடு தானாக எரிகிறது! புதிய கதை கூறும் மானிப்பாய் தவிசாளர் | Kallundai Dump Fire Spark Row Hill Burning Manipay

அந்த குப்பைமேடு தானாக எரிவதாக தவிசாளர் தெரிவித்துள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.

மேலும் நேற்றையதினம் மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்களை கல்லுண்டாய் பகுதி மக்களும், மானிப்பாய் பிரதேச சபையின் சில உறுப்பினர்களும் வழிமறித்து குப்பைகளை கொட்ட அனுமதிக்க முடியாது என முரண்பட்டனர்.

இந்த சம்பவம் பற்றியும், குப்பைமேடு எரிவது பற்றியும் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் ஜசீதனுக்கு தெரியப்படுத்தியும் அவர் அந்த இடத்திற்கு வருகை தரவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த காலத்தில் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் அ.ஜெபநேசனும், மாநகர சபையின் முதல்வராக வி.மணிவண்ணனும் பதவி வகித்த காலப்பகுதியில் 2022.11.30 அன்றும் 2022.12.01 அன்றும் இதே குப்பை மேட்டுக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பொலிவுட் நடிகர் சாருக்கான் இலங்கையில் நடத்தவுள்ள பிரமாண்ட நிகழ்வு..

பொலிவுட் நடிகர் சாருக்கான் இலங்கையில் நடத்தவுள்ள பிரமாண்ட நிகழ்வு..

கல்லுண்டாய் பகுதி மக்கள் 

அந்தப் போராட்டத்தில் அன்றைய மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் அ.ஜெபநேசன், இன்றைய மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் ஜசீதன், கட்சி பேதமின்றி அனைத்து கட்சிகளினதும் மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் கல்லுண்டாய் பகுதி மக்கள் என அனைவரும் ஓரணியில் நின்று குப்பைமேட்டுக்கு எதிராக போராடினர்.

கல்லுண்டாய் குப்பைமேடு தானாக எரிகிறது! புதிய கதை கூறும் மானிப்பாய் தவிசாளர் | Kallundai Dump Fire Spark Row Hill Burning Manipay

ஆனால் தற்போது மானிப்பாய் பிரதேச சபையிலும், யாழ்ப்பாணம் மாநகர சபையிலும் இலங்கை தமிழரசு கட்சியின் ஆட்சி காணப்படுகின்ற சூழ்நிலையிலும் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் மௌனம் காப்பதும், பொறுப்பற்ற பதிலும் மக்கள் மத்தியில் கேள்வியையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US