கல்லடி பாலத்தில் இருந்து பாய்ந்த நபர் : தேடுதலின் போது சடலமாக மீட்பு
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பாலத்தில் இருந்து பாய்ந்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பாலத்திற்கு அருகாமையில் கடமையில் இருந்த போக்குவரத்து பொலிசாருக்கு அவ்வீதியால் பயணித்த பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் நேற்று(26.03.2026) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் மேலதிக விசாரணை
இதன்போது குறித்த மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
உயிரிழந்த நபரின் மோட்டார் சைக்கிளும் கல்லடி பாலத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதுடன் தற்போது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் சம்பந்தமாக மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.