கல்கிசை நீதிமன்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
கொழும்பு - கல்கிசை நீதவான் நீதிமன்றத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.
போதைப்பொருள் கடத்தல்காரரான 'ஹரக்கட்டா'வின் ஆலோசனையின் பேரிலேயே அண்மையில் கல்கிஸை நீதிவான் நீதிமன்றத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொல்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொது முறைப்பாட்டு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் துப்பாக்கி பிரயோகத்தின் பின்னணி தெரியவந்துள்ளது.
இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் அவரை வழிநடத்தியவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் வழக்கு விசாரணை
கடந்த ஆகஸ்ட் 4 ஆம் திகதி கல்கிஸை நிதிவான் நீதிமன்றில் போதைப்பொருள் தொடர்பான வழக்கு விசாரணை இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
போதைப்பொருள் தொடர்பான வழக்கு விசாரணைக்காக முன்னிலையாகி இருந்த நபரை இலக்கு வைத்தே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்
மேலும், வழக்கு விசாரணைக்கு முன்னிலையான நபர் வெள்ளவத்தை பொலிஸாரால் நிதி மோசடி மற்றும் போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய் டிவியில் இருந்து பிரியங்காவிற்கு கொடுக்கப்பட்ட பரிசு.. பதறிய தொகுப்பாளினி, அப்படி என்ன கொடுத்தாங்க? Cineulagam

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri

Super Singer: பாடிக் கொண்டிருக்கும் போதே நடுவர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்! ஃபைனலிஸ்ட்டாக சென்றவர் யார்? Manithan

அதிரவைக்கும் பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம் News Lankasri
