கொழும்பின் புறநகர் பகுதியில் பரபரப்பு - நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு(Video)
புதிய இணைப்பு
கல்கிஸ்ஸ நீதிமன்றில் இன்று துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த துப்பாக்கி பிரயோகம், வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடையவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.
மேலும் இவர் மீது வெள்ளவத்தை பொலிஸாரால் நிதி மோசடி தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
முதலாம் இணைப்பு
கொழும்பின் புறநகர் பகுதியில் மர்மநபர்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோத்தினால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
கல்கிஸ்ஸ நீதிமன்றில் போதைப்பொருள் தொடர்பான வழக்கு விசாரணை இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைக்காக முன்னிலையாகி இருந்த நபர் மீது இலக்கு வைத்தே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வழக்கு விசாரணைக்காக குறித்த சந்தேகநபர் முன்னிலையாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.