கஜ்ஜாவின் கொலை விவகாரம்: சகோதரிகள் வெளியிட்ட காரணம்
மீகஸ்ஆரே கஜ்ஜா எனப்படும் அருண விதானகமகே என்கின்ற கஜ்ஜாவை அவரின் மனைவி ஹமீசாவே திட்டம் தீட்டி கொலை செய்துள்ளதாக கஜ்ஜாவின் மூன்று சகோதரிகளும் தெரிவித்துள்ளனர்.
இணையத்தளம் ஒன்றிக்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இந்த கொலைக்கு மகிந்தவின் மச்சான் கபில திசாநாயக்க பொறுப்பு கூற வேண்டும். கபில திசாநாயக்க தம்பியை எப்படி கொல்லலாம் என சந்தர்ப்பம் பார்த்திருந்தார்.ஹமீசாவின் குடும்பத்திற்கு கபிலவுடன் இருந்த தொடர்பில் இந்த கொலை நடந்திருக்கலாம்.
மனைவியை கொடுமைப்படுத்திய கஜ்ஜா......
கஜ்ஜாவின் மனைவியான ஹமீசாவுக்கும் தம்பியின் சாரதிக்குமிடையில் ஏற்பட்ட சட்டத்துக்கு முரணான தொடர்பை அறிந்து கொண்ட பின்னர் மனைவியை அடித்து துன்புறுத்தினார்.ஒரு கட்டத்தில் அவர்கள் இருவரும் அறையில் இருக்கும் சந்தர்ப்பத்தில் தீ வைத்துள்ளார். அச்சந்தர்ப்பத்தில் அவர்கள் ஜன்னலை உடைத்து கொண்டு தப்பிச்சென்றனர்.
இதன்பின்னர் தம்பி, ஹிமீசாவுக்கு பலவாறான கொடூரங்களை செய்துள்ளார். அதன் வைராக்கியத்தில் பெரும் கோபத்துடன் தான் இருந்தார். இருவரும் ஒன்றாக வாழ்ந்தாலும் ஹமீசா கோபத்துடனேயே இருந்தார்.
ஹமீசா ஒரு பெண் நாகம்.எங்கள் குடும்பத்தையும் அவளே வீணாக்கினால்.தம்பி குற்றங்கள் செய்வதற்கு அவரே தூண்டுதலாகவும் செயற்பட்டார்.
ஹமீசாவின் அக்காவுக்கும் மஹிந்தவின் மச்சான் இருந்த தொடர்பு....
ஹமீசாவின் அக்கா அகிலாவுக்கும் மகிந்தவின் மச்சான் கபில திசாநாயக்கவுக்கும் இடையில் திருமணத்துக்கு புறம்பான தொடர்பிருந்தது.அதனால் ராஜபக்சர்களுடன் தம்பியை கூட்டு சேர்ப்பதில் மனைவியே பெரும் பிரயத்தனம் மேற்கொண்டார்.
ஒரு சந்தர்ப்பத்தில் தம்பி பாதுகாப்பு அமைச்சில் சாரதியாக வேலை செய்து கொண்டிருக்கும் போது ஹமீசாவே ஒரு கடிதத்தில் அவருக்கு க.பொ.த சாதாரண தரம் இல்லை என அமைச்சுக்கு அறிவித்திருந்ததாக தம்பி எங்களிடம் தெரிவித்திருந்தார்.
இவை அனைத்தும் அவள் செய்தது தம்பியை ராஜபக்சர்களுடன் இணைப்பதற்காக ஆகும். ஒரு வருட காலமாகவே இருவரும் பிரிந்திருந்ததோடு விவாகரத்து வழக்கும் பதியப்பட்டிருந்தது.சிறைக்கு சென்றால் வெளியில் எடுப்பதாக உறுதியளித்திருந்தார்.
சம்பத் ராமநாயக்கவுடனான தொடர்பு நீண்ட காலம் இருந்தது. ஆனால் தம்பி எங்களிடம் ஒன்றும் தெரிவிக்கவில்லை.கடந்த இரண்டு மாதங்களே எமக்கு தெரியும்.இவை கஜ்ஜாவின் மூத்த மகனுக்கும் தெரியும். இம்முறை சிறைக்கு சென்ற பின்னர் தான் தம்பியை, ஹமீசா காப்பற்றவில்லை.
ஏனென்றால் தனது திருமணத்துக்கு புறம்பான உறவை தம்பி அறிந்திருந்ததால். திட்டமிட்டு வெளியில் எடுக்கவில்லை. பின்னர் சம்பத் ராமநாயக்கவுடன் ஹமீசா டுபாய் செல்ல திட்டமிட்ட குற்றச் கும்பலுடன் சேர்ந்து செய்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




