யாழ்ப்பாணம் கல்வியற் கல்லூரிக்கு நிரந்தர பீடாதிபதியை நியமிக்க வலியுறுத்தும் கஜேந்திரன் எம்.பி
யாழ்ப்பாணம் கல்வியற் கல்லூரியில் மாணவர்கள் மிக மோசமாக உளவியல் நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும், உடனடியாக நிரந்தர பீடாதிபதி ஒருவரை நியமிக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் (Selvarajah Kajendran) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களின் பிரச்சினைகள்
மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணம் கல்வியற் கல்லூரியில் மாணவர்கள் மிக மோசமான உளவியல் நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக அங்கு கல்வி பயிலும் ஆசிரிய மாணவர்கள் தரப்பிலிருந்தும், அவர்களின் பெற்றோர்களின் தரப்பிலிருந்தும் எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
யாழ்ப்பாணம் கல்வியிற் கல்லூரிக்கு ஒரு நிரந்தரமான பீடாதிபதி நியமிக்கப்படாத நிலையில், பதில் பீடாதிபதியின் தலைமையில் தான் அது இயங்கிக் கொண்டிருக்கிறது.
ஏன் கல்வியியற் கல்லூரிக்கு ஒரு நிரந்தரமான பீடாதிபதி நியமிக்கப்படவில்லையென்ற கேள்வி இருக்கின்றது.
ஆகவே அந்த மாணவர்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்கு அவசரமாக குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
இதேநேரத்திலே உடனடியாக ஒரு நிரந்தர பீடாதிபதி ஒருவரை அந்த கல்வியியற் கல்லூரிக்கு நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" எனவும் செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |