கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும்.. வைகோ திட்டவட்டம்!
கச்சத்தீவு ஒப்பந்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினரான வைகோ என்கின்ற வையாபுரி கோபால்சாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், "தமிழக கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.
கடற்றொழிலாளர்கள் பிரச்சினை
2025 ஆம் ஆண்டில் மட்டும் 150க்கும் அதிகமான கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் கைது மற்றும் தாக்குதலால் தமிழக கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து கடற்றொழிலாளர்களையும் விடுவிக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கடற்றொழிலாளர்கள் கைது செய்வதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும்.
கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்து திரும்பப் பெற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 21 மணி நேரம் முன்

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

IQ Test: சிறையிலிருந்து தப்பித்தவர் யார்? 5 வினாடிகளில் புதிரைத் தீர்த்து மக்களை காப்பாத்துங்க Manithan
