சிங்கள பௌத்தர்களின் வயிற்றில் அடித்த கோட்டாபய: கபீர் ஹாசீம் சாடல்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பாவங்களை கழுவிக் கொள்ளவே புத்தகம் எழுதினார் என நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று(24.04.2024) உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“பீதியை ஏற்படுத்தியே கோட்டாபய ராஜபக்ச நாட்டின் ஆட்சியை கைப்பற்றினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
ஆட்சியை கைப்பற்றிய அவர் முதலில் சிங்கள பௌத்தர்களின் வயிற்றில் அடித்தார்.
இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் குறித்து விவாதம் நடத்துவதில் பயனில்லை.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்க வேண்டும்
மேலும், கோட்டாபய ராஜபக்ச வரலாற்றை கற்றுக்கொள்ள வேண்டுமெனவும் முஸ்லிம்கள் சிங்கள அரசர்களின் காலத்திலிருந்தே எவரையும் காட்டிக் கொடுத்தது கிடையாது” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |