மனைவியை இழந்த கே.வி.தவராசாவுக்கு கொழும்பில் காத்திருந்த பேரதிர்ச்சி
40 வருடங்களாக நீதித்துறையில் முன்னணி சட்டத்தரணியாக திகழ்வதற்கும், ஜனாதிபதி சட்டத்தரணியாக உயர்வதற்கும் தனது மனைவி கௌரி சங்கரியே காரணம் என கொழும்பைச் சேர்ந்த ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகம் வழங்கும் “ஊடறுப்பு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சாதாரண மனிதராக இருந்த என்னை கொழும்பிற்கு அழைத்து வந்து, இவ்வளவு பெரிய சட்டத்தரணியாக மாற்றியவர் என்னுடைய துணைவியார் தான். சுமார் 40 ஆண்டுகளாக எனக்குத் தேவையான அனைத்து வேலைகளையும் அவர்தான் செய்து வந்தார்.
அந்தக் காலப்பகுதியில் எங்களுடன் அலுவலகத்தில் பணியாற்றிய இளம் பெண் சட்டத்தரணி ஒருவரால் 60 கோப்புகள் திருடப்பட்டன. அதேபோன்று, இந்த விடயம் தொடர்பில் விசாரித்தபோது, எதுவும் தெரியாதது போன்று அவர்கள் பேசினார்கள்.
அதன் பின்னர், தற்போது என்னுடன் இருப்பவர்களை வைத்துத்தான் கடந்த 5 ஆண்டுகளாக இந்தப் பணியை தொடர்ந்து வருகின்றேன்.
மேலும், மாயமான கோப்புகள் காரணமாக ஏராளமான வழக்குகள் இன்றுவரை நிலுவையில் உள்ளதாகவும் அறிய முடிகின்றது. சில வருடங்களுக்கு முன்னர் எனக்கும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது என்றார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் பல தகவல்களையும், அனுபவங்களையும் உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறது “ஊடறுப்பு” நிகழ்ச்சி,