வடக்கு மக்களை தவறாக வழிநடத்தும் தமிழ் அரசியல்வாதிகள்: அமைச்சர் காட்டம்
வடக்கு மக்களின் சொந்த காணிகளை அவர்களுக்கு உரித்துடன் வழங்கவே அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், வர்த்தமானி அறிவித்தலைத் தவறாக புரிந்து கொண்டுள்ள தமிழ் அரசியல்வாதிகள் சிலர், மக்களையும் தவறாக வழிநடத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர் என காணி அமைச்சர் கே.டி.லால் காந்த தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
காணிகளை அபகரிக்கும் நோக்கம்
அவர் மேலும் கூறுகையில், வடக்கில் மக்களின் காணிகளை அபகரிக்கும் நோக்கம் அரசுக்குக் கிடையாது. கைவிடப்பட்டிருக்கும் அவர்களின் சொந்தக் காணிகளை அவர்களுக்கு உரித்துடன் வழங்கவே அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமையவே வர்த்தமானியை அரசு வெளியிட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தலைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ள தமிழ் அரசியல்வாதிகள் சிலர், மக்களையும் தவறாக வழிநடத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
பொய்யான கோஷம்
தமிழ் மக்களின் சொந்தக் காணிகளை ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசு சுவீகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது என்று பொய்யான கோஷத்தை முன்வைத்து வடக்கு மக்களை வீதியில் களமிறக்கி அரசுக்கு எதிராகப் போராட வைக்கத் தமிழ் அரசியல்வாதிகள் சிலர் எத்தனிக்கின்றனர்.
எனவே, வடக்கு மக்கள் உண்மையை நிலைமையைப் புரிந்துகொள்ள வேண்டும். போலி வேடம் போட்டு உங்களைத் தவறாக வழிநடத்தும் தமிழ் அரசியல்வாதிகளை நம்ப வேண்டாம் என்று வடக்கு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

கூலி திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ்.. ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடிகள் வந்துவிட்டதா Cineulagam

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri
