தேரர்கள் மாநாட்டை கடுமையாக விமர்சித்த அமைச்சர் லால் காந்த
கொழும்பில் பௌத்த தேரர்கள் நடத்திய பௌத்த பிக்குகள் மகா சம்மேளனம் தோல்வியடைந்துள்ளதாக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார்.
எண்ணாயிரம் தேரர்களை மாநாட்டுக்கு அழைத்து வருவதாக சொன்னார்கள்.ஆனால் 300 க்கு மேற்பட்டவர்களே வந்திருந்தனர்.மாநாடு நடத்துவதற்கு முன்னர் சமூகத்தில் பெரும் பேசு பொருளாக்கப்பட்ட விடயம் இன்று பிசுபிசுத்துப் போயுள்ளது.
சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
எமக்கு பெரும் நம்பிக்கை இருந்தது,நாட்டில் இன்று பொருளாதார சமூக கலாசாரத்தில் நாங்கள் ஏற்படுத்திருக்கும் மாற்றம் நிச்சயம் மக்கள் அறிவர்.
அத்தோடு இனவாதத்திற்கு எதிராக ஏற்பட்டிருக்கும் மாற்றம் போன்றவற்றை அறிந்தவர்களுக்கும் இது புரியும்.நான் முன்பு சொன்னது போல் தேரர்கள் வருவார்கள் போவார்கள் ஒன்றும் நடக்காது.

ஆனால் மாநாட்டுக்கு பின்னர் ஏதோ ஒன்று நடந்துள்ளது.அதாவது மாநாட்டுக்கு முன்னர் ஏதோ பலத்தை காட்டி கொண்டிருந்தனர்.அந்த பலம் இப்போது பூச்சியம் வரை கீழ் சென்றுள்ளது.
மேலும் இதிலுள்ள சில பௌத்த தேரர்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் குற்றச்சாட்டுகளும் உள்ளன என்றார்.