பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள போதிலும் மக்கள் வாழ்ந்தே ஆக வேண்டிய சூழ்நிலை! கே.டி.குருசாமி (Video)
நாட்டில் தற்போது பொருட்களின் விலைகள் அதிகரித்திருந்தாலும் கூட மக்கள் வாழ்ந்தே ஆக வேண்டிய சூழ்நிலை காணப்படுவதாக விவேகா பயிற்சி நிலையத்தின் ஸ்தாபகத் தலைவர் கே.டி.குருசாமி தெரிவித்துள்ளார்.
லங்காசிறிக்கு வழங்கிய விசேட செவ்வியில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், கோவிட் தொற்று மற்றும் பொருளாதார சூழ்நிலைகள் காரணமாக நாடு வங்குரோத்து நிலைமைக்கு சென்று அது மேல்நோக்கி வரும் போது பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.
உண்மையில் வாழ முடியாத ஒரு சூழ்நிலை ஒரு சாராருக்கு இருக்கும் பொழுது இன்னொரு புறம் பார்த்தால் விழுந்த வர்த்தக நிறுவனங்கள் பல காணப்படுகின்றன.
என்றாலும் கூட மக்கள் வாழ்ந்தே ஆக வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது. எனினும் விலைவாசி உயர்விற்கு ஏற்ப வருமானங்களும் இல்லை. இதனை எப்படி ஈடுகட்டுவது என்பதும் எமக்கு தெரியாது.
மிகவும் மனம் வருந்தக்கூடிய நிலைமை தான் இது என குறிப்பிட்டுள்ளார். இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய தகவல்களை உள்ளடக்கி வருகிறது இந்த காணொளி,