ஜேவிபியுடன் கைகோர்க்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அதிகாரிகள்: அனுர பகிரங்கம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளை முன்னெடுத்த சிஐடி அதிகாரிகள் தேசிய மக்கள் சக்தியின் ஒய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மன்றத்திற்கு தலைமைதாங்கவுள்ளனர் என அனுரகுமார திசநாயக்க பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
கனடாவின் ரொறன்ரோவில் இலங்கை சமூகத்தினருடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“மே மாதம் இந்த அமைப்பு செயற்பட ஆரம்பிக்கும் என தெரிவித்துள்ள அவர் இந்த தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக சட்டத்தை இவர்கள் நடைமுறைப்படுத்துவார்கள்.
தாக்குதல் குறித்த விசாரணை
உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து புதிய விசாரணைகள் அவசியமில்லை. ஏற்கனவே இடம்பெற்ற விசாரணைகளின் மூலம் வெளியான பல விடயங்கள் உண்மையானவையா என்பதை உறுதி செய்யவேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளை மேற்கொண்ட சிஐடி உத்தியோகத்தர்கள் தற்போது ஓய்வுபெற்றுவிட்டனர். அவர்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து பணியாற்றுகின்றனர்.
மே மாதத்தில் நாங்கள் ஆரம்பிக்கவுள்ள ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் அமைப்பிற்கு உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளை முன்னெடுத்த சிஐடி தலைவர் தலைமைதாங்குவார்.
மைத்திரிபால சிறிசேன
நாங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவோம். குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவோம்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த சில நாட்களிற்கு முன்னர் தெரிவித்துள்ள விடயங்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும்.." என்றார்.
you may like this
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam