ஜே.வி.பியின் இந்திய எதிர்ப்பு: டில்வின் சில்வாவின் திடீர் மாற்றம்!
இந்தியாவுக்கு எதிராக கடந்த காலங்களில் இருந்த எதிர்ப்புகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையில் நம்பிக்கையூட்டும் நட்புறவை அடிப்படையாகக் கொண்ட புதிய காலம் மலர்ந்துள்ளதாக ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்திய எதிர்ப்பு – கொள்கை
கடந்த காலத்தில் ஜே.வி.பிக்குள் நிலவிய இந்திய எதிர்ப்பு ,இந்தியாவுக்கு எதிரானதல்ல; அன்றைய இந்திய அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிரான கொள்கை அடிப்படையிலான நிலைப்பாடு மட்டுமே.
இப்போது அந்த பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நிலவும் நட்புறவு இரு நாடுகளுக்கும் மட்டுமல்ல, முழு பிராந்தியத்திற்கும் முக்கியமானது.
மேலும், இலங்கையின் நம்பகமான நண்பனாக இந்தியா செயல்படத் தயாராக இருப்பது ஒரு வெற்றியாகும்.
இந்திய உத்தியோகப்பூர்வ பயணம்
இந்தியாவிற்கான விஜயத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதில் மாகாண சபைகள் அல்லது அரசியல் விடயங்கள் குறித்து எவ்விதப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை.
முக்கியமாக பொருளாதார அபிவிருத்தி மற்றும் புதிய தொழில்நுட்பங்களை இலங்கைக்கு கொண்டுவருவது பற்றியே கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri