தமிழர்களிடம் வாக்கு கேட்க முன் ஜே.வி.பி மன்னிப்பு கோர வேண்டும்: சபா குகதாஸ்
தமிழர்களிடம் வாக்கு கேட்க முன் ஜே.வி.பி மன்னிப்பு கேட்க வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் இன்றைய தினம்(21.02.2024) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகள் பிரதிநிதிகளை சந்திக்க ஆரம்பித்துள்ளனர்.
அது அவர்களின் ஜனநாயக உரிமை ஆனால் தமிழர்களுடன் ஜே.வி.பி பேசுவதற்கு முன்பாக பிரதான இரண்டு விடையத்தை தெளிவுபடுத்த வேண்டும்.
ஒன்று ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்று அவர்கள் கோரி நிற்கும் சமஸ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இரண்டாவது ஜேவி.பியின் முன்னாள் தலைவர் றோஹண விஜயவீர ஈழத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ளவில்லை.
பதின்மூன்றாம் திருத்தம்
அத்துடன் 2006 இணைந்த வடகிழக்கு மாகாணங்களை சட்டரீதியாக பிரிப்பதற்கு ஜே.வி.பியின் உயர்நீதிமன்ற வழக்கே காரணமானது 2009 முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைக்கு தென்னிலங்கையில் சாரை சாரையாக பெரும்பான்மையின இளைஞர்களை இராணுத்தில் இணைவதற்கு தமிழர்களை அழிக்க வேண்டும் என்ற வெறித்தனமான பிரசாரத்தை மேற்கொண்டது.
யுத்த வெற்றியை ராஜபக்ச குடும்பத்துடன் பாற்சோறு வழங்கி கொண்டாடியது தாங்கள் தமிழர்களுக்கு செய்த தவறு அதற்கான நீதி கிடைக்க பகிரங்க மன்னிப்பு அநுரகுமார தலைமையிலான கட்சி தமிழர்களிடம் கேட்க வேண்டும்.
ஆட்சி அதிகாரத்தை பெறுவதற்காக பெரும்பான்மையின மக்களிடம் தங்களை இனவெறியர்களாக காட்ட அண்மையில் அநுரகுமார கூறிய கருத்து மிக மோசமானது அதாவது தமிழர்களிடம் தென்னிலங்கையர் சமஸ்டி மற்றும் பதின்மூன்றாம் திருத்தம் தொடர்பில் பேசக் கூடாது இதன் மூலம் ஜே.வி.பி.யின் இனவாத முகம் நிரூபணமாகியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

viral video: படமெடுத்து நின்ற ராஜ நாகத்தை அசால்ட்டாக வெறும் கையில் தூக்கிய நபர்! இறுதியில் என்ன நடந்தது? Manithan
