முன்னாள் உபவேந்தர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் ஜே.வி.பிக்கு தொடர்பு-எஸ்.பி.திஸாநாயக்க குற்றச்சாட்டு
பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் மக்கள் விடுதலை முன்னணி, முன்னிலை சோசலிசக்கட்சியின் மாணவர் அமைப்பு மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மிகவும் துரதிஷ்டவசமான சம்பவம்
மிகவும் துரதிஷ்டவசமான சம்பவம் பேராதனை பல்கலைக்கழகத்தில் நடந்துள்ளது. இலங்கையில் மாத்திரமல்ல, ஆசியாவிலும் மிக மதிப்புக்குரிய பூகோளவியலாளராக கருதப்படும் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அத்துல சேனாரத்னவை மிகவும் மோசமாக தாக்கியுள்ளனர்.
பேராசிரியரை தாக்கி இழுத்துச் செல்ல முயற்சித்துள்ளனர். இந்த உயரிய நாடாளுமன்றம் இந்த சம்பவம் குறித்து கவனம் செலுத்த வேண்டும். 1987 ஆம் ஆண்டு பேராசிரியர் ஸ்டென்லி விஜேசுந்தர கொலை செய்யப்பட்டார்.
அதேபோல் 87 ஆம் ஆண்டு மொறட்டுவை கட்டுபெத்தயில் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் படுவிட்டவிதான கொலை செய்யப்பட்டார். சுமார் 80 ஆயிரம் மனித உயிர்கள் பலியாகி அது முடிவுக்கு வந்தது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் மக்கள் விடுதலை முன்னணி, முன்னிலை சோசலிசக்கட்சியின் மாணவர் அமைப்பு மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவருக்கும் தொடர்பு இருக்கின்றது.
இது குறித்து நாம் அனைவரும் கவனம் செலுத்தி சந்தேக நபர்களுக்கு உச்சபட்ச தண்டனையை வழங்க வேண்டும் எனவும் எஸ்.பி.திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 மணி நேரம் முன்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan
