மீண்டும் அழிவான நிலைமையை உருவாக்க முயற்சிக்கும் ஜே.வி.பி-பொதுஜன பெரமுன
மக்கள் விடுதலை முன்னணி கடந்த 1988-89 ஆம் ஆண்டுகளில் செய்தது போல் நாட்டுக்குள் அழிவான நிலைமையை உருவாக்க முயற்சித்து வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அமல் சாந்த மயாதுன்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தலையைமகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
துண்டுப்பிரசுரங்களை கடைகளை மூடும் நிலைமை உருவாகி வருகிறது
1988-89 ஆம் ஆண்டுகளில் போன்ற துண்டுப்பிரசுரம் மூலம் கடைகளை மூடும் நிலைமை உருவாகி வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது. பல்கலைக்கழக உபவேந்தர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
இதனை நாங்கள் மிகவும் அருவருப்புடன் கண்டிக்கின்றோம். தெற்கில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குள் ஜே.வி.பி.மற்றும் முன்னிலை சோசலிசக்கட்சியினர் புகுந்து பிள்ளைகளின் எதிர்காலத்தை அழித்து வருகின்றனர்.
தற்போது நடைபெறும் சம்பவங்களுக்கு இந்த கட்சிகள் முற்றாக பொறுப்புக்கூற வேண்டும். பசில் ராஜபக்ச நடத்திய கருத்து கணிப்புக்கு அமைய நாங்கள் தேர்தலுக்கு செல்ல அச்சப்படுவதாக லால்காந்த கூறுகிறார்.
ஜே.வி.பி கூறுவது போல் எமது கட்சியின் கூட்டங்கள் நிறுத்தப்படவில்லை
நாங்கள் தேர்தல்களுக்கு பயந்த கட்சியல்ல. தேர்தலை விட நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே தற்போதைய தேவையாக உள்ளது. நாட்டை அபிவிருத்தி செய்த ஒரே கட்சி எமது கட்சி. தேர்தல் காலத்தில் தேர்தலை நடத்துவோம்.
முதலில் நாடு என்ற வகையில் நாம் ஸ்திரத்தன்மைக்கு வர வேண்டும். களுத்துறையில் ஆரம்பிக்கப்பட்ட பொதுஜன பெரமுனவின் கூட்டங்கள் புத்தளத்தில் முடிவடைந்து விட்டது என ஜே.வி.பி கூறுகிறது. நாங்கள் கூட்டங்களை நிறுத்தவில்லை.
கீழ் மட்டத்தில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம் எனவும் அமல் சாந்த மயாதுன்ன கூறியுள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 மணி நேரம் முன்

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
