ஜே.வி.பி அரசாங்கத்தில் வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களுக்கு இடம் : அனுரகுமார திட்டவட்டம்
எதிர்காலத்தில் அமையவுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் இடம்பெறுவார்கள என்று கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட மாநாட்டில் இன்று உரையாற்றிய அவர், தீவிரவாதிமோ இனவாதமோ இல்லாத மிதவாத தமிழ்த் தலைவர்களுடன் ஏற்கனவே தாம் கலந்துரையாடி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மொழிப்பிரச்சினை, காணிப்பிரச்சினை போன்ற தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தீர்வு காணும் என்றும், தமிழர்களின் அரசியல் உரிமைகளை உறுதிசெய்யும் வகையில் அரசியலமைப்புத் திருத்தங்களை கொண்டுவரவுள்ளதாகவும் அனுரகுமார குறிப்பிட்டுள்ளார்.
மொழிப்பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிப்பதாகவும், அரசாங்கத்துடன் தமிழ் மொழியில் விடயங்களை கையாளும் உரிமையை உறுதி செய்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri