குறுகிய காலத்திற்கு பிரதமர் பதவியை வழங்குமாறு கோரும் ஜே.வி.பி.
குறுகிய காலத்திற்கு பிரதமர் பதவியை வழங்குமாறு ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டை மீட்க ஜே.வி.பி தயார்
நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு ஜே.வி.பி. தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறுகிய காலத்திற்கு பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவையை ஒப்படைக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரச்சினைகளுக்கு தீர்வு
அவ்வாறு வழங்கினால் மிகக் குறுகிய காலத்திற்குள் எரிபொருள், எரிவாயு, மின்சாரம், அத்தியாவசிய உணவு, விவசாயம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சியாளர்கள் டொலர்களை களவாடுவதனால் வெளிநாடுகளில் பணியாற்றி வரும் இலங்கையர்கள் டொலர்களை நாட்டுக்கு அனுப்புவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளா தலைமைகளினால் ஒரு போதும் தீர்வுகளை வழங்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan
விமானம் தரையிறங்கும் துல்லியத்தை 4 மடங்கு உயர்த்திய ரஷ்ய விஞ்ஞானிகள் - புதிய மென்பொருள் கண்டுபிடிப்பு News Lankasri