இணையத்தில் வேகமாக பரவும் ஜஸ்டின் ட்ரூடோவின் புகைப்படம்
கனேடிய முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடா நாடாளுமன்றத்திலிருந்து தனது நாற்காலியுடன் நாக்கை நீட்டியபடி வெளியேறிய புகைப்படம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
வட அமெரிக்க நாடான கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ(Justin trudeau), இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மக்களின் செல்வாக்கை இழந்ததால், கட்சியின் நெருக்கடியைத் தொடர்ந்து பதவி விலகியுள்ளார்.
ஜஸ்டின் ட்ரூடோ
கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை, பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ தொடருவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஒரு மாதத்துக்கு மேலாக நடந்த பல கட்ட ஆலோசனைகளைத் தொடர்ந்து, கட்சியின் தலைவராக மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அடுத்த சில நாட்களில் மார்க் கார்னி பிரதமராகப் பதவியேற்க உள்ள நிலையில், இன்று புதிய பிரதமராகப் பதவியேற்க உள்ள மார்க் கார்னியை ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்துள்ளார்.
கனடாவில் எம்.பி.யாக இருந்தவர் பதவி விலகியதும் தான் அமர்ந்திருந்த நாற்காலியை கொண்டு செல்லலாம் என்பது நடைமுறை ஆகும்.
வைரல் புகைப்படம்
இது அவரது பதவிக்காலம் முடிவடைவதைக் குறிக்கும் ஒரு அடையாள ரீதியான ஒரு சமிக்ஞை ஆகும். அந்தவகையில், ட்ரூடோ தனது ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் கதிரையை நாடாளுமன்ற அவையில் இருந்து வெளியே எடுத்துச் செல்லும் தருணத்தை படம் பிடித்த புகைப்படக் கலைஞர் அதனை பகிர்ந்துள்ளார்.
அதன்போது ஜஸ்டின் ட்ரூடோ தனது நாக்கை நீட்டியபடி, கையில் நாற்காலியுடன் இருப்பதையும் காட்டும் இந்தப் புகைப்படம் சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் அவருடைய ஆதரவாளர்கள் மற்றும் விமர்சகர்கள் இருதரப்பினராலும் பரவலாகப் பகிரப்பட்டுள்ளது.
ஜஸ்டின் ட்ரூடோ தனது தலைமைப் பொறுப்பிலிருந்து விலகும்போது அவர் வினோதமாகப் பிரியாவிடை பெறுவதற்கான அடையாளமாக இந்தப் படம் மாறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் முக்கிய பிரபலங்கள் மாற்றம்.. யார் யார் தெரியுமா? Cineulagam
