கனடா பிரதமர் ட்ரூடோ பயணித்த விமானத்தில் ஏற்பட்ட கோளாறு
கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ பயணித்த விமானத்தில் பல சந்தர்ப்பங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனேடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் கடந்த டிசம்பர் மாதம் 26ஆம் திகதி விடுமுறைக்காக ஜமைக்கா நாட்டிற்குச் சென்றிருந்தார்.
விமானத்தில் திடீர் கோளாறு
இந்நிலையில் பயணம் முடிந்து ஜனவரி 4ஆம் திகதி அவர் கனடா திரும்புவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, ஜனவரி 3ஆம் திகதி அவரது விமானத்தை தயார் செய்வதற்காக அதை பரிசோதித்த பராமரிப்புக் குழுவினர், விமானத்தில் பழுது இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

இதன் போது பழுதை சரிசெய்வதற்கான குழுவுடன் மற்றொரு விமானம் ஜமைக்கா நாட்டிற்குச் சென்றதுடன் பழுது பார்க்கப்பட்டதும் இரு விமானங்களும் ஜனவரி 4ஆம் திகதி கனடா திரும்பின.
அத்துடன் கடந்த நான்கு மாதங்களுக்குள் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பயணித்த விமானம் இரண்டு முறை பழுதாகியுள்ளது.
ஏற்கனவே, ஜி20 மாநாட்டுக்காக இந்தியா வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மாநாடு முடிந்து திரும்புகையில் செல்லவேண்டிய விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam